மாப்பிள்ளை சம்பா அவல் உப்புமா

kuttybabuPPT
0
மாப்பிள்ளை சம்பா அவல் உப்புமா

தேவையானவை
 

மாப்பிளை சம்பா அவல் - கால் கப்

 வெங்காயம் நறுக்கியது - ஒன்று

 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

 நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்

 வேர்க்கடலை - 2 டீஸ்பூன் 

கடுகு - ஒரு தேக்கரண்டி 

உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

 உப்பு - தேவையான அளவு

 கருவேப்பிலை -  சிறிதளவு 

எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி

 செய்முறை 

மாப்பிள்ளை சம்பா அவல் எடுத்து ஓடும் குழாய் நீரில் கழுவவும்.

 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை முழுவதுமாக வடிகட்டவும்.

 தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

 கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.

 கடுகு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

 பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும் .

நன்கு கிளறி மஞ்சள் தூள் சேர்க்கவும்.

 இப்போது அவல் மற்றும் உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் தெளித்து மூடி வைத்து இரண்டு நிமிடம் சமைக்கவும்.
 இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து தேங்காய் சட்னி உடன் சூடாக பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)