தேவையான பொருட்கள்
சேமியா - ஒரு பாக்கெட்
எண்ணெய் - கால் கப்
முட்டை - இரண்டு
வெங்காயமும் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் , மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சேமியாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் .
வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .
அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட்டு தக்காளியை சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
இதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதி வந்ததும் வறுத்து வைத்த சேமியாவை சேர்த்து கிளறவும்.
தீயை குறைத்துக் கொண்டு முட்டையை உடைத்து மேலாக உற்றவும் .
மேலும் மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை விடவும்.
கொத்தமல்லி, புதினா இலைகளை நறுக்கி சேர்த்து கிளறவும்.
இப்போது சுவையான முட்டை சேமியா தயார்.