தேவையான பொருட்கள்
வெண்ணை - ஒரு டீஸ்பூன்
கிராம்பு - பத்து
பூண்டு வெட்டியது
பச்ச மிளகாய் நீளமாக நறுக்கியது - ஐந்து
பால் - இரண்டு கப்
முந்திரி - கால் கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - அரை தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எலும்பில்லாத கோழிக்கறி - 500 கிராம்
மைதா மாவு - 2 டீஸ்பூன்
சோள மாவு - 4 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகுத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து திக்கான பேஸ்ட் ஆக கரைத்துக் கொள்ளவும்.
அதில் கழுவிய கோழி துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இன்னொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய பூண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பால் மற்றும் முந்திரி தூள் சேர்த்து பொரித்த கோழியையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சூடான ஜப்பான் சிக்கன் தயார்.