தேவையானவை
வறுக்காத கார்ன்ப்ளக்ஸ் - மூன்று கப்
வேர்க்கடலை - கால் கப்
முந்திரி - 10
பாதாம் பருப்பு - 10
பொட்டுக்கடலை - 5 டேபிள்ஸ்பூன்
காய்ந்த திராட்சை - மூன்று ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
வாணிலியில் எண்ணெயை காய வைத்து கார்ன்ஃப்ளக்ஸை பொறித்து எடுத்து வடிகட்டவும்.
இதே போல பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை திராட்சை, கருவேப்பிலை என ஒவ்வொன்றாக தனித்தனியாக எண்ணெயில் பொரித்து கார்ன்பிளக்ஸில் சேர்த்து சூடாக இருக்கும்போதே உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
கரகரப்பான ருசியுடன் மிக்சர் தயார்.