தேவையான பொருட்கள்
மரவள்ளி கிழங்கு மாவு - 120 கிராம்
நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
அடிகனமான பாத்திரத்தில் 100 கிராம் நாட்டு சர்க்கரை ஆறு மேசை கரண்டி தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரைந்து தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து வடிகட்டிக் கொள்ளவும் .
வடிகட்டிய நீரை மீண்டும் அடிப்பில் மிதமான தீயில் வைக்கவும்.
பின்பு மரவள்ளிக் கிழங்கு மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சற்று சூடு தணிந்ததும் சப்பாத்தி மாவு பதத்தில் மாவை பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சுண்டைக்காய் அல்லது சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
வாய் அகன்ற பாத்திரத்தில் நீர் ஊற்றி நன்கு கொதிக்கும் போது உருட்டிய உருண்டைகளை சேர்த்து 20 நிமிடங்கள் விடவும் .
வெந்ததும் அடுப்பை அணைத்து 20 நிமிடங்கள் அப்படியே வேக வைத்த தண்ணீரில் ஊற விடவும் .
பின்னர் உருண்டைகளை தனியாக வடிகட்டிக் கொள்ளவும்.
இதனுடன் 100 கிராம் நாட்டு சர்க்கரை, 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் .
இது பார்ப்பதற்கு கருமை நிற மாதுளை முத்துக்கள் போன்று காட்சியளிக்கும்.
போபா முத்துக்கள் தயார்.
இந்த போபா முத்துக்களை வைத்து 200 வகையான டீக்களை தயார் செய்யலாம்.