தேவையான பொருட்கள்
பூண்டு - 50 கிராம்
குழம்பு மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு குழி கரண்டி
கடுகு - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கொத்து
செய்முறை
பூண்டை மேல்தோல் மட்டும் குறித்து மிக்ஸியில் போடவும் அதனுடன் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் 50 மில்லி தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து அரைத்த மசாலாவை சேர்க்கவும் .
எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான திடீர் பூண்டு சட்னி தயார்.
குறிப்பு
இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.