சிறுதானிய அதிரசம்

kuttybabuPPT
0
சிறுதானிய அதிரசம்
 தேவையானவை

 சாமை அரிசி ,திணை அரிசி - தலா அரைக்கப் 

வெல்லம் - கால் கப் 

வெள்ளை எள் - 2 ஸ்பூன் 

நெய் - ஒரு ஸ்பூன் 

ஏலக்காய் தூள் , சுக்குத்தூள் - ஒரு ஸ்பூன் 

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

 செய்முறை 

சாமை திணை அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி மாவாக்கவும்.

 அடுப்பில் கனமான பாத்திரத்தில் வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு பாகு காய்ச்சி இறக்கி ஏலக்காய் தூள், சுக்குத்தூள், எள் சேர்க்கவும்.

 பின் அரைத்த மாவில் சிறிது சிறிதாக பாகில் சேர்க்கவும் .

சப்பாத்தி மாவு பதம் வந்தவுடன் பாகு சேர்ப்பதை நிறுத்தி நெய் தடவி மாவை அப்படியே வைக்கவும் .

மறுநாள் அந்த மாவை நெய் தடவிய வாழை இலையில் கொஞ்சம் எடுத்து அதிரசங்களாக தட்டி காய்ந்த எண்ணையில் ஒவ்வொன்றாக போட்டு சுட்டு எடுக்கவும்.
 சுவையுடன் சத்து நிறைந்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)