தேவையான பொருட்கள்
கேக் தயாரிப்பதற்கு
முட்டை - மூன்று
மைதா - ஒன்னேகால் கப்
சர்க்கரை - முக்கால் கப்
பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்
பால் - முக்கால் கப்
எண்ணெய் - அரை கப்
வெண்ணிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
விரும்பிய வண்ணங்கள் - ஆறு
கிரீன் தயாரிப்பதற்கு
விப்பிங் கிரீம் - ஒன்னே கால் கப்
பொடித்த சர்க்கரை - 2 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - கால் கப்
சுகர் சிரப்பு தயாரிப்பதற்கு
சர்க்கரை - 2 டீஸ்பூன்
தண்ணீர் - மூன்று டேபிள் ஸ்பூன்
செய்முறை
அகலமான பாத்திரத்தில் கேக் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை மாவு பதத்தில் இருக்கும் அந்த கலவையை ஆறு பாகங்களாக பிரித்து தனித்தனி பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
ஒவ்வொரு மாவிலும் உங்களுக்கு விருப்பமான நிறங்களை தனித்தனியாக கலந்து கொள்ளவும்.
ஓவனை 180 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடு படுத்தவும்.
பின்னர் தனித்தனி கேக் ட்ரெயில் வெண்ணை தடவி அதில் மாவை ஊற்றி ஓவனில் வேக வைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் விப்பிங் கிருமி போட்டு பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும் .
பின்னர் அதில் சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் கலந்து மீண்டும் அடிக்கவும்.
இப்போது கிரீன் தயார் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சுகர் சிறப்பு தயாரித்து ஆரம்பிக்கவும்.
பின்பு தயாரித்து வைத்துள்ள கேக் அடுக்குகள் மீது சுகர் சிறப்பை தெளித்து அதன் மேல் கிரீன் தடவி ஒன்றன் மேல் ஒன்றாக எடுக்கவும்.
கேட்கின் மீது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அலங்காரம் செய்யவும் .
இப்போது சுவையான வானவில் கேக் தயார்.