சமையல் டிப்ஸ்

kuttybabuPPT
0
சமையல் டிப்ஸ் 
சாம்பார் பொடி அரைக்கும் போது ஒரு கரண்டி கடுகு சேர்த்து அரைத்தால் பூச்சி வண்டு வராது.

 சர்க்கரை கலந்த நீரில் பழங்களை சற்று நேரம் போட்டு எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் சுவை குறையாமல் இருக்கும்.

 ஆவக்காய் ஊறுகாய் போடும்போது இரண்டு கைப்பிடி கொண்டை கடலை போட்டுவிட்டால் ஊறிய பிறகு உப்பு காரம் சேர்ந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடம்புக்கு இரும்பு சத்து கூடும்.

 தோசை மாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்க வைக்க சிறிதளவு மிளகாய் வற்றல் காம்புகளை போட்டு வைத்தால் போதும் விரைவில் மாவு புளித்து தோசை பிரமாதமாக வரும்.

 சீயக்காயை அரைக்கும் போது வேப்ப பூவை கலந்து அரைத்து பயன்படுத்தினால் பொடுகு, பேன் தொல்லைகள் இருக்காது .

உப்பு கொட்டி வைக்கும் பாத்திரத்தில் சிறிது பச்சை மிளகாயை போட்டு வைத்தால் உப்பில் நீர்க்கசிவு ஏற்படாது.

 சப்பாத்தி காய்ந்து போனால் அதன் மேல் சிறிது தண்ணீர் தெளித்து பத்து வினாடி மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சூடாக்கினால் அப்போது சுட்டது போல ஆகிவிடும்.

 அடைக்கு உறவைக்கும்போது பயத்தம் பருப்பு, ஜவ்வரிசி ஊறவைத்து அரைத்தால் அடை மொறுமொறுப்புடன் சுவையாக இருக்கும்.

 கடுகை வாங்கினவுடன் லேசாக வறுத்து ஆற வைத்து டப்பாவில் போட்டு உபயோகித்தால் தாளிக்கும் போது கடுகு வெடித்து சிதறாது.

 மோர் மிளகாய் செய்யும்போது அதனுடன் பாகற்காய் உள்ளங்கை அளவு சேர்த்து வற்றல் தயாரித்தால் மிளகாயில் சிறு கசப்பும் , பாகற்காயில் காரமும் கலந்து மாறுதலான சுவை உடன் இருக்கும்.

 பாகற்காய் குழம்பு வைக்கும் போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்து போட்டால் கசப்பு தெரியாமல் சுவையாக இருக்கும்.

பிரிட்ஜரில் வெண்ணை வைத்து அது கட்டியாகி விட்டால் அது தோசை கல்லில் தேய்த்து தோசை சப்பாத்தி செய்தால் வெண்ணெய் சிறிதளவு செலவாகும்.
வெண்ணையும் சீராக பரவும்.

 குருமாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் அதில் ஒரு பிரட் ஸ்லைசை மேலாக போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்துப் போடவும் .அதிகப்படியான நீர் உறிஞ்சப்பட்டு விடும்.

 தோசை மாவு குறைவாக இருந்தால் அதே அளவுக்கு அரிசி மாவு சிறிது தேங்காய் துருவல் ஒரு தேக்கரண்டி, சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மாவை கரைத்து ஆப்பமாக ஊற்றினால் சாப்ட் ஆகவும், டேஸ்டாகவும் இருக்கும் .

தேங்காய் பொடி அரைக்க தேங்காய்க்கு பதில் கொப்பரையை சேர்த்தால் மீண்டும் நாட்கள் கெடாமல் இருக்கும். மணமுடனும் இருக்கும்.

 எண்ணெய் கத்திரிக்காயில் ஒரு ஸ்பூன் கெட்டி தயிர் விட்டால் கத்திரிக்காய் கருத்து போகாமல் இருக்கும் .

இரண்டு பங்கு பயத்தம் பருப்பு, ஒரு பங்கு பச்சரிசி கலந்து ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய் , பெருங்காயம் கலந்து அரைத்து தோசை ஊற்றினால் தோசை சூப்பராக இருக்கும்.

 தேங்காயில் பால் பிழிந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் கூட எளிதில் ஈறுத்து போய்விடும்.

 தேங்காயை துருவி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் தேவையான போது பால் எடுத்துக் கொள்ளலாம்.
 தேங்காய் பால் ஃபிரெஷ் ஆக இருக்கும்.

 போலிக்கு பூராணம் செய்யும் போது சிறிது வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொண்டால் சுவை சூப்பராக இருக்கும்.

கருணைக்கிழங்கு நல்ல சிறந்த கருத்து காணப்பட்டால் அதுதான் நல்ல கிழங்கு .அது சுவையாக இருப்பதுடன் சீக்கிரமாகவும் வெந்துவிடும்.

 முருங்கைக்காய் கணுக்காய் தெரியாமல் ஒரே சீராக இருப்பதை மட்டும் வாங்குங்கள்.

 பிளாஸ்கிலிருந்து வரும் ஒருவித துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை தோல்கள் சிலவற்றை பிளாஸ்க்னுள் போட்டு வெந்நீர் ஊற்றி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வழக்கம்போல் பிளாக்கை கழுவி வையுங்கள். துர்நாற்றம் சுத்தமாக நீங்கிவிடும்.

 வீட்டில் ஈக்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதா? சிறிதளவு வசம்பை அரைத்து உப்பு தண்ணீரில் வீடு முழுவதும் தெளித்தால் ஈக்கள் தொல்லை இருக்காது.

 சில கறைகள் எது போட்டாலும் போகாமல் இருக்கும் .பேக்கிங் சோடா பவுடரை வினிகரில் கரைத்து கரை படிந்த இடங்களில் தேய்த்து வைத்தால் சிறிது நேரத்தில் கரை கரைந்து விடும்.

 பொங்கல் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா ? அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்து கலந்து விட்டால் கெட்டியாகும் .

கடுகை அரைத்து தூள் செய்து அதை வைத்து வெள்ளி பாத்திரங்களை கழுவினால் வெள்ளி பாத்திரங்கள் கண்ணை பறிக்கும் .
வெண்ணீரில் சிறிது டால்டா கலந்து கோதுமை மாவில் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)