தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - அரை கிலோ
முந்திரி - பத்து
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
எள் - நான்கு டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 4 டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு குழி கரண்டி
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு தாளித்து நறுக்கிய கத்திரிக்காயை உப்பில் போட்டு நன்கு வதக்கவும் .
வதங்கியதும் வெங்காயத்தை கொர கொரப் என்று அரைத்து சேர்க்கவும்.
பிறகு தக்காளியை வேகவைத்து தோல் உரித்து பிழிந்து சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக் கிளறி வறுத்து பொடித்த முந்திரி, எள் மற்றும் வேர்க்கடலையை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும் .
பிறகு புளி கரைசலை சேர்த்து கொதித்ததும் இறக்கவும் .
சுவையான கத்திரிக்காய் கட்டா தயார்.
குறிப்பு
பிரியாணி, தேங்காய் பால் சாதம், குஸ்கா இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.