தேவையான பொருட்கள்
மைதா மாவு - 200 கிராம்
திராட்சை நறுக்கியது - 50 கிராம்
வெண்ணை - 200 கிராம்
பால் - அரைக்கப்
சர்க்கரை - 200 கிராம்
சோள மாவு - 2 ஸ்பூன்
முட்டை - 5 செரி
பழம் - அறுபது
செய்முறை
பிளம் கேக் செய்வதற்கு முதலில் பாலில் சோளமாவை கலந்து கேஸ் ஸ்டவ்வை சிம்மில் வைத்து மாவு கட்டியாகாமல் கூல் பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
மைதா மாவை சலித்துக் கொள்ளவும்.
பிறகு சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடித்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையையும், மைதாவையும் ஒன்றாக கலந்து கொண்டு அதனுடன் வெண்ணையை சேர்த்து மிருதுவாக பிசையவும்.
பிறகு முட்டையை எக் பீட்டரில் போட்டு நுரை பொங்க அடித்து கலந்து வைத்துள்ள கலவை உடன் சேர்த்து அனைத்தையும் கேக் மிக்சரில் போட்டு கலக்கவும்.
பிறகு கேக் டின்னில் பட்டர் பேப்பர் போட்டு பரப்பிவிட்டு டின்னுக்கு வெளியே இருக்கும்படி இழுத்துவிட்டு கேக் கலவையை பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் பாதி ஊற்றி அதன் மீது துண்டுகளாக நறுக்கிய செரி பழங்களை போட்டு அதன் மீது மீதி கலவையை ஊற்றி மிதமான சூட்டில் மைக்ரோவேவ் ஓவனில் 40 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சுவையான ப்ளம் கேக் தயார்.