தேவையான பொருட்கள்
முட்டை - இரண்டு
கம்பு மாவு - 60 கிராம்
பொடித்து சர்க்கரை - 50 கிராம்
பால் - இருபது மில்லி
வெண்ணிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
அகலமான பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும் .
பின்பு அதில் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டே நன்றாக அடித்து கலக்கவும் .
சர்க்கரை முழுதாக கரைந்ததும் கம்பு மாவை கொட்டி மென்மையாக கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
பிறகு அதில் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் கலந்து மீண்டும் மிருதுவாக நன்றாக கலக்கவும்.
கேக்கில் வெண்ணை அல்லது நெய் தடவிய பின்பு மாவு கலவையை ஊற்றி வேக வைக்கவும்.
கேக் வெந்து ஆறு ஏதும் ட்ரையிலிருந்து எடுத்து விருப்பப்பட்டால் ஐசிங் சுகர் கொண்டு அலங்கரிக்கலாம்.