சிக்கன் கிரேவி

kuttybabuPPT
0
சிக்கன் கிரேவி

தேவையானவை 

சிக்கன் - 1/2 கிலோ.

 பட்டை - ஒன்னு 

சோம்பு =ஒன்னு

 கிராம்பு, ஏலக்காய் - 3 

தனியா - ஒரு டீஸ்பூன் 

மிளகு - ஒரு டீஸ்பூன்

 சீரகம் - 2 டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - ஐந்து

 தேங்காய் துருவல் - அரை கப்

 முந்திரி - ஐந்து 

எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்

 பிரியாணி இலை - இரண்டு 

சின்ன வெங்காயம் - ஒரு கப் 

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

 தக்காளி - ஒன்று

 உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

வாணலியில் பட்டை, சோம்பு , கிராம்பு, ஏலக்காய், தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வறுத்து அத்துடன் தேங்காய் துருவல், முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து அரைத்து கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலைகள், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் அரைத்து வைத்த மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி பிறகு தக்காளி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

 பின்னர் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதித்து வரும்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து சுமார் 15 நிமிடங்களுக்கு வேக விடவும்.

 தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 இறுதியாக கொத்துமல்லி தூவி இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)