வாழைக்காய் புட்டு

kuttybabuPPT
0
வாழைக்காய் புட்டு 

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 2

 வெங்காயம் - ஒன்று

 பச்சை மிளகாய் - இரண்டு 

தேங்காய் துருவல் - அரை கப்

 கருவேப்பிலை - சிறிதளவு 

கடுகு - அரை டீஸ்பூன் 

உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

 எண்ணெய் - ஒரு ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 செய்முறை 

வாழைக்காயை நன்றாக கழுவி ஓரங்களை நறுக்கிக் கொள்ளவும்.

 பின் பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.

 ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைக்காயை சேர்த்து மூடி வைத்து வேக விடவும் .

வாழைக்காயின் தோல் கருப்பாக மாறும் போது நடுவில் ஒரு கத்தியால் குத்தி பார்த்தால் பூவாக இருக்கும்.

 பின் தண்ணீரை முழுவதும் வடித்து ஒரு தட்டில் வைத்து ஆற வைத்து தோலை உரித்து கொள்ளவும்.

 பின் கேரட் துருவலில் பொடியாக துருவிக் கொள்ளவும்.

 வாழைக்காய் துருவலோடு தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் .

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து வெங்காயம் , கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 வெங்காயம் வதங்கியதும் கலந்து வைத்துள்ள வாழைக்காய் துருவலை சேர்த்து நன்கு மெதுவாக கலந்து இறக்கவும் .
சுவையான வாழைக்காய் புட்டு ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)