தேவையானவை
துவரம் பருப்பு - 50 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
தேங்காய் துண்டுகள் - 3 பத்தை
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
எண்ணெய் - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், தேங்காய் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த இந்த பொருட்களை நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும் .
மிக்ஸியில் வறுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும் .
பிறகு அவற்றுடன் கொஞ்சம் தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.