தேவையானவை
சாமை மாவு - 100 கிராம்
கேரட் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
குடைமிளகாய் - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 8 பல்
வெண்ணை - ஒரு கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை
சாமை மாவுடன் உப்பு கலந்த சூடான நீர் தெளித்து நன்கு பிசைந்து சிறு சிறு நீள உருண்டைகளாக உருட்டவும்.
இதை நன்கு கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வேக விடவும் பின் வடிகட்டவும் காய்கறிகளுடன் பூண்டு சிறிது உப்பு கலந்து வேகவைத்து வடித்து மைய அரைத்துக் கொள்ளவும்.
வெண்ணையை சூடாக்கி பொடியாக நறுக்கிய பூண்டை வதக்கவும் .
பின் வடிகட்டி வைத்துள்ள உருண்டைகளை தாளித்து பின் அரைத்து வைத்துள்ள விழுதையை சேர்த்து மெதுவாக கலந்து கொதித்த பின் உப்பும், மிளகுத்தூளும் கலந்து பரிமாறலாம்.