சிவப்பரிசி புட்டு

kuttybabuPPT
0
சிவப்பரிசி புட்டு 

தேவையானவை

 சிவப்பரிசி -  ரெண்டு கப்

 தேங்காய் துருவல் - ஒரு கப் 

உப்பு - தேவைக்கு ஏற்ப 

செய்முறை 

சிவப்பரிசியை மூன்று முறை நன்கு கழுவி சுத்தமான தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்,

 ஊறியதும் தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு நிழலில் ஒரு துணியை விரித்து அரிசியை பரப்பி உலர விடவும்.

 நன்கு உலர்ந்ததும் மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸ் மாேல்டிலும் பிறகு சாதாரணமான மோல்டிலும் வைத்து நைசாக பாெடிக்கவும்.

 புட்டுக்கான மாவை தயார் செய்து சிவப்பரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்துக்கு கலக்கவும்.

 இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான நீர் விட்டு மேலாக இட்லி தட்டை வைக்கவும்.

 தயாரித்து வைத்திருக்கும் புட்டு மாவை இட்லி தட்டில் பரவலாக பரப்பி மேலே தேங்காய் துருவலைப் போட்டு இட்லி பாத்திரத்தை மூடி 15 முதல் 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

 மணக்கும் சிவப்பரிசி புட்டு ரெடி.

 புட்டுக் குழாயில் மாவை அடைத்து குழாய் புட்டாகவும் செய்யலாம்.

 நாட்டுச்சர்க்கரை சேர்த்து வாழைப்பழத்தை போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
 கடலைக் குழம்பு உடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)