சிக்கன் சாம்பார்

kuttybabuPPT
0
சிக்கன் சாம்பார்

தேவையானவை

 துவரம் பருப்பு - ஒரு கப் 

மசூர் பருப்பு - ஒரு கப் 

கடலைப்பருப்பு - கால் கப் 

பாசிப்பருப்பு - கால் கப் 

பெருங்காயம் - அரை ஸ்பூன்

 மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன் 

தண்ணீர் - நான்கு கப் 

கடுகு - ஒரு டீஸ்பூன்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 மசாலாவிற்கு 

 நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்

 நறுக்கிய தக்காளி - அரை கப்

 இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 பச்சை மிளகாய் - 3 முதல் 4 

மிளகாய் - இரண்டு 

மிளகாய் தூள் - அரை ஸ்பூன்

 சீரகத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

 எலுமிச்சம் பழச்சாறு - அரை ஸ்பூன்

 கரம் மசாலா - அரை ஸ்பூன்

புதினா - அரை கப் 

கொத்தமல்லி - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 பட்டை - ஒரு அங்குலம்

 லவங்கம் - மூணு 

மிளகு - ஒரு டீஸ்பூன்

 சிக்கன் -  250 கிராம்

 செய்முறை

 பிரஷர் குக்கரில் அனைத்து பருப்புகளையும் சேர்க்கவும் .

இதில் மஞ்சள், பெருங்காயம் மற்றும் தண்ணீர் சேர்த்து சுமார் மூன்று விசில் வரும் வரை சமைக்கவும் .

குளிர்ந்ததும் பருப்பை நன்றாக கலந்து வைக்கவும் .

ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும்.

 எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 வெங்காயம் பொன்னிறமான உடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.

 பின்னர் தக்காளி சேர்க்கவும்.

 உடன் அனைத்து உலர்ந்த மசாலாவையும் அரைத்து நன்றாக வதக்கவும் .

பின்னர் சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து குறைந்தது 5 நிமிடம் வரை கொதிக்க விடவும் .

நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

 இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் சிக்கன் கலவையில் உப்பு மற்றும் பருப்பு கலவையை சேர்க்கவும்.

 மிதமான தீயில் வைத்து இறுதியாக எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

 கொத்தமல்லி இலை தூவி, சூடான சாதத்துடன் அல்லது சப்பாத்தி, தோசை உடன் பரிமாறவும் .
எலுமிச்சை சுவை தொண்டையில் இறங்கும்போது இன்னும் சுவை கூட்டி காட்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)