தேவையானவை
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
வறுத்து தோல் உரித்த நிலக்கடலை பருப்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
தேங்காய் துருவல், நிலக்கடலை, வர மிளகாய், சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும் .
சூப்பர் சைடிஷ் இந்த சட்னி