தேவையானவை
சோயா உருண்டைகள் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பச்சை பட்டாணி - ஒரு கப்
மிளகாய் தூள், தனியா தூள் - தலா ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள், கரம் மசாலா - தலா ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க தேவையானவை
தேங்காய் துருவல் - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
செய்முறை
சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 15 நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு எடுத்து பிழிந்து இரண்டாக நறுக்கவும்.
பச்சை பட்டாணியை வேகவைத்து பொடி வகைகளை சேர்த்து பிசையவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை அறிந்து இதனுடன் சோயா உருண்டைகள், பிசறிய பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து கலக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கருவேப்பிலை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
கலந்து வைத்துள்ளவற்றை சேர்த்து மசாலா வாசம் போக நன்றாக கிளறவும்.
நல்ல மணம் வந்ததும் இறக்கி விடவும்.