பாதாம் அல்வா

kuttybabuPPT
0
பாதாம் அல்வா 

தேவையானவை 

பாதாம் பருப்பு - அரை கப் 

சர்க்கரை - கால் கப் 

நெய் - 1 1/4 டேபிள் ஸ்பூன்

 ஏலப்பொடி - கால் டீஸ்பூன்

 முந்திரிப்பருப்பு - கால் டீஸ்பூன்

 செய்முறை 

பாதாம் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

 ஊறவைத்தபின் தோல் உரித்து மிக்ஸியில் பால் சேர்த்து நன்றாக நல்ல மையாக அரைக்கவும்.

 ஒரு கிண்ணத்தில் குங்கும பூவை மிதமான சூடான பாலில் ஊற வைக்கவும்.

 அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து அரைத்த விழுதையும் நன்றாக 4 நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும்.

 சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறவும்.

 சர்க்கரை நன்றாக கரைந்ததும் மீண்டும் மீதம் இருக்கிற பாலும், குங்கும பூவையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும் .

மீதம் இருக்கிற நெயையும் சேர்த்து கிளறவும் .

பாத்திரத்தில் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்கவும் .
இதை சூடாகவும், ஆற வைத்தும் சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)