சமையல் குறிப்புகள்

kuttybabuPPT
0
வீட்டு குறிப்புகள்
பூண்டை ஒரு மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவைத்து பிறகு தோலை உரித்தால் எளிதில் உரிந்து வரும்.

 பச்சை பட்டாணியை வேகவைக்கும் போது சிறிது சர்க்கரையை தூவி விட்டால் நிறமும் மாறாது சுவையும் கூடும்.

 கோதுமை மாவையும், பார்லியையும் சம அளவில் கலந்து சப்பாத்தி செய்தால் டேஸ்டாக இருக்கும்.

 எலுமிச்சை சாறு தயாரிக்கும் போது சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.

 காய்கறி சாலட் செய்யும்போது சில பிரட்டு துண்டுகளை போட்டு விட்டால் சாலட் நீர்த்து போகாமல் புதுவித டேஸ்டுடன் இருக்கும்.

 ஐஸ்கிரீம் செய்ய பாலை தேவைக்கு அதிகமாக சுண்ட காய்ச்சக் கூடாது அப்படி செய்தால் சுவை குறைந்துவிடும்.

 குலோப் ஜாமுனுக்கு உருண்டைகளை உருட்டும்போது கைகளில் நெய் தடவிக் கொண்டால் கைகளில் ஒட்டாது.

 வெள்ளரிக்காய்களை சிலைசாக நறுக்கிக் கொண்டு பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து செய்தால் பஜ்ஜி சூப்பராக இருக்கும்.

 எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களை வெந்நீரில் போட்டு வைத்து பிழிந்தால் சாறு கூடுதலாக கிடைக்கும்.

 குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் சிறிதளவு வறுத்த அரிசி பொடியை தூவினால் சரியாகிவிடும்.

 பருப்பு வகைகளை வேக வைக்கும் போது சுத்திகரித்த எண்ணையோ அல்லது சிறிது பூண்டை போட்டு விட்டால் சுவையும் கூடும் .வாயு கோளாறையும் குறைக்கும் .

கொதிநீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து விட்டால் உருளைக்கிழங்கு நன்றாக வெந்துவிடும்.

 வெண்பொங்கல் மிதமாகிவிட்டால் கடுகு, உளுந்து தாளிப்பு, நறுக்கிய வெங்காயம் , தக்காளி, சாம்பார் பொடி ஆகியவற்றை வதக்கி சிறிது புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடுங்கள் அதில் மீதமாகிவிட்ட பொங்கலை காெட்டி கிளறினால் சாம்பார் சாதம் தயார் .

மாவுடன் வேகவைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைத்து போண்டா, வடை செய்தால் சூப்பராக இருக்கும்.

 வெங்காயம் நறுக்கும் போது சுவிங்கம் சாப்பிட்டால் கண்களில் தண்ணீர் வராது. அரிப்பும் ஏற்படாது.

 உப்பு கரைத்த தண்ணீரில் தக்காளியை போட்டு வைத்தால் அழுகாமல் இருக்கும் .

அசைவ வாடையை பாத்திரங்களில் இருந்து அகல, புளியைத் தடவி, சிறிது நேரம் கழித்து கிளீனிங் பவுடரால் சுத்தப்படுத்தினால் பளிச்சென்று ஆகிவிடும்.

 சுத்தமான மண் பாண்டத்தில் பாலை ஊற்றி வைத்தால் இரண்டு நாட்கள் வரை பால் கெட்டுப் போகாமல் இருக்கும்.

 நூலை சோப்பில் ஒரு தேய்த்து விட்டு பிறகு ஊசியில் கோர்த்தால் எளிதில் கோர்க்க முடியும் .

சர்க்கரை பொங்கலில் போட்ட திராட்சை முந்திரி இல்லாவிட்டால் தேங்காயை நறுக்கி எண்ணெயில் வறுத்து பொங்கலில் சேர்த்து விட்டால் சுவை அதிகரிக்கும் .

காபி மேக்கரை கழுவும் போது நீருடன் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் விட்டு சுச்சை ஆன் செய்யவும் சுத்தமாகிவிடும்.

குழம்பு செய்யும் போது வத்தல் குழம்பு பொடியை எண்ணெயில் வதக்கி பிறகு புளியை கரைத்து ஊற்றினால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

 குழம்பு அல்லது கூட்டு செய்யும் போது அதில் அரிசி மாவை கரைத்து விடுவோம். அதற்கு பதில் கோதுமை மாவை கரைத்து விட்டால் ருசியாக இருக்கும்.குழம்பில் பருப்பு குறைவாக இருந்தாலும் தெரியாது.

 அரைக்கீரை சமைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

 வாணலியில் எண்ணெய் சூடானவுடன் அதில் வாழைப்பழ தோல், கொய்யா இலை, சிறிது புளி, வினிகர் தவிர மற்றவற்றை எடுத்து விட்டு பலகாரம் செய்யலாம் .எண்ணெய் பொங்கி வழியாது.

 தயிர் வடைக்கு உளுந்தை அரைக்கும் போது மாவின் அளவிற்கு ஏற்ப பாதி அல்லது முழு வாழைப்பழம் சேர்த்து செய்தால் வடை சாப்டாகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும் .

வடை மாவுடன் ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்து வடை செய்தால் அதிகம் மொறுமொறுப்புடன் டேஸ்டாக இருக்கும்.

 சேமியா உப்புமா செய்வதற்கு முன்பு சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பிறகு உப்புமா செய்தால் சூப்பராக இருக்கும்.

 கூட்டுக்கு போட தேங்காய் துருவல் இல்லாவிட்டால் அப்பளம் பொரித்து அதில் நொறுக்கி போட்டால் சுவையாக இருக்கும் .
மாங்காய் ஊறுகாய் போடுவதற்கு மாங்காய் ஊற வைத்து புளிப்பு நீரை கீழே கொட்டி விடாமல் சிறிது மோர் விட்டு மிளகாய் ஊறுகாய் போடலாம் டேஸ்டாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)