கீரை ஆம்லெட்

kuttybabuPPT
0
கீரை ஆம்லெட் 
தேவையானவை

 முட்டை - 2

 ஏதேனும் கீரை - ஒரு கைப்பிடி

 காளான் நன்கு கழுவி துடைத்தது - 10

 பால் - ரெண்டு தேக்கரண்டி

 மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி 

மல்லி நறுக்கியது - சிறிதளவு

 எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

 செய்முறை 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய கீரை, காளான், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

 இன்னொரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உடன் பால், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும் .
இன்னொரு தோசை கல் அல்லது தோசை தவாவில் முட்டையை ஊற்றி அதன் மேல் ஊத்தாப்பம் பாணியில் கீரை, காளான் கலவையை அப்படியே பரப்பி முட்டை நன்கு வெந்ததும் அரை பாயிலில் சாப்பிட்டாலும் சரி, இல்லை திருப்பி போட்டு நன்கு முழு ஆம்லெட் ஆகவும் சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)