காய்கறிகளும், பழங்களிலும் தோலை ஒட்டி தாது உப்புக்கள், உயிர் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எனவே முடிந்தவரை தோலுடன் சமைப்பது நல்லது.
கீரை வாங்கும் போது மஞ்சள் நிற இலைகள் அதிகம் இருந்தால் வாங்குவதை தவிர்க்கவும். ஒட்டடைகள், பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரையும் வாங்கக்கூடாது.
தொண்டை கட்டிக் கொண்டால் கற்பூரவள்ளிச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.
வடை தட்டும் போது உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் வடை வித்தியாசமான ருசியோடு இருக்கும்.
பாகற்காய் குழம்பு செய்யும் போது சில துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
சிறிதளவு இஞ்சி யோடு மிளகு, தேங்காய் துருவல், பேரிச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சுவையான பச்சடி தயார்.
சூப்புகள் செய்யும் போது சோள மாவு அல்லது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடித்து சலித்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.
பச்சை கொத்தமல்லி தலையை துவையலுக்கு அரைக்கும் போது புளி போடுவதற்கு பதில் ஒரு துண்டு மாங்காயை போட்டு அரைத்தால் சுவையும், மணமும் அதிகமாகும்.
கீரையை புளி ஊற்றி கடையும் போது அதனுடன் சில மோர் மிளகாய், வெற்றிலை வறுத்து போட்டு கடைந்தால் ருசியாக இருக்கும்.
கீரை சமைக்கும் போது ஒரு மிளகு அளவிலான வெற்றிலை பாக்கு போடும் சுண்ணாம்பை கலந்தால் கீரை வெந்த பிறகும் நிறம் மாறாமல் இருக்கும் .
வாழைக்காயை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது இரண்டாக நறுக்கி வைத்தால் கருப்பாகாமல் இருக்கும்.