தேவையானவை
மட்டன் மார்கண்டம் - கால் கிலோ
மிளகு - அரை தேக்கரண்டி
வெங்காயம் சிறியது - ஒன்று
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயம், கருவேப்பிலை - தாளிக்க
பட்டை கிராம்பு - ஒரு துண்டு
செய்முறை
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
மட்டனை சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி , இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு ஐந்து முதல் ஆறு விசில் வரை வேக வைத்து கொள்ள வேண்டும் .
பின்னர் குக்கரை திறந்து வெந்ததும் நீரை வடித்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டி கொதிக்க விட்டு இறக்கி மிளகாய் தூள் செய்து சேர்த்து பரிமாறவும்.
சூடான மட்டன் மார் கண்டம் சூப் ரெடி
பலன்கள்
ஊட்டச்சத்து அடர்த்தி அதிகம் உள்ள சூப் நோய் எதிர்ப்பு அளவை மேம்படுத்துகிறது .
உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.