தேவையானவை
தோல் சீவி துருவிய சுரக்காய் - 200 கிராம்
உப்பு - தேவைக்கு
பெரிய வெங்காயம் - ஒன்னு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - இரண்டு
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கெட்டி தயிர் - 300 மில்லி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காய வைத்து துருவிய சுரக்காய், வெங்காயத்தை போட்டு வதக்கி மிளகுத்தூள் , சீரகம், பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கி உப்பு கலந்து இறக்கவும்.
ஆறியதும் தயிருடன் கலந்து பரிமாறவும்.