தேவையான பொருட்கள்
ஆப்பிள் - ஒரு கிலோ
மைதா - ஒரு கிலோ
வெண்ணை - ஆறு நூறு கிராம்
ஐசிங் சர்க்கரை - 500 கிராம்
மில்க்மெய்டு - 100 கிராம்
பால் - 150 மில்லி
சர்க்கரை - 250 கிராம்
பட்டைத்தூண்டு - 10 கிராம்
பிரட் தூள் - 250 கிராம்
செய்முறை
ஆப்பிள் ஐசிங் கேக்கை செய்வதற்கு வெண்ணெய் , சர்க்கரை, மில்க்மெய்டு, பால், மைதா மாவு ஆகிய அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் .
பிறகு ஆப்பிள் தோலை நீக்கி பொடி பொடியாக நறுக்கி அதனுடன் சர்க்கரை, பட்டைத்தூள், வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
வேகவைத்த ஆப்பிள் உடன் பிரட் தூளை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு அந்த கலவையை தடிமன் ஆகும் வரை உருட்டி வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி உருட்டிய மாவை வைத்து அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும்.
இதன் மேல் மில்க் மேய்ட் பரவலாக சேர்த்து மைக்ரோ ஓவனில் 150 டிகிரி சென்டி கிரேட்டில் 40 நிமிடம் வேக வைத்து எடுத்தால் ஆப்பிள் ஐசி கேக் தயார்.