தேவையானவை
பாஸ்மதி அரிசி - இரண்டு கப்
சோயா உருண்டைகள் - 15
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - ஐந்து அல்லது ஆறு பற்கள்
புதினா - அரை கட்டு
பூண்டு, மல்லித்தளை - கால் கட்டு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
புளித்த தயிர் - கால் கப்
எலுமிச்சை - ஒன்று
பட்டை, இலவங்கம், ஏலக்காய் - தலா இரண்டு
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும் .
சோயாவை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசிக்கொள்ள வேண்டும் .
வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கவும் .
மிளகாயை கீறி வைக்கவும் .
இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும்.
புதினா, மல்லிகை ஆய்ந்து சுத்தம் செய்யவும் .
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி கணிந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காயை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
பின் தக்காளி, சோயா , மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கி தயிர், எலுமிச்சை சாறு சேர்க்கவும் .
பின் ஊற வைத்து அரிசியை தண்ணீருடன் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் போடவும் .
ஒரு விசில் வந்ததும் தீயை குறைத்து பத்து நிமிடங்கள் வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.