தேவையானவை
தூதுவளை - ஒரு கட்டு
வேக வைத்த துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகு, உப்பு - தலா அரை டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சீரகம், கடுகு எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மல்லித்தூள், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பூண்டுப்பற்கள் - 2
செய்முறை
தூதுவளையை ஆய்ந்து முள்ளை நீக்கி கழுவி வைக்கவும்.
சிறிய உரலில் வர மிளகாய் ,மிளகு சீரகத்தை பொடித்து பூண்டு, தூதுவளையை ஒன்று இரண்டாக பொடித்து வைக்கவும்.
புளியை ஊற வைத்து இரண்டு கப்பு சாறு எடுத்து உப்பு சேர்த்து வைக்கவும்,
பருப்பை கடைந்து புளி தண்ணீரில் சேர்க்கவும் .
அத்துடன் மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்க்கவும் .
கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகை போட்டு வெடிக்க விடவும்.
பின்னர் சீரகம் , வெந்தயம், பெருங்காயத்தூளை போடவும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து அரை நிமிடம் வதக்கி புளித்தண்ணீரை ஊற்றவும் .
நுறைத்து பொங்கி வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.