தேவையானவை
சாமை - 100 கிராம்
பச்சரிசி ஜவ்வரிசி இரண்டும் சேர்த்து - நான்கு டேபிள்ஸ்பூன்
உளுந்து - 25 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மேலே தூவ பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒன்று
பொடியாக நறுக்கிய கேரட் ,தக்காளி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன்
பாெடித்த முந்திரி - 25 கிராம்
ஊறிய கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
அனைத்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை
சாமை , பச்சரிசி , ஜவ்வரிசி , உளுந்து அனைத்தையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைக்கவும் .
மறுநாள் தோசை கல்லை சூடு செய்து எண்ணை விட்டு மாவை தடிமனாக வார்த்து மேலே தூவ வேண்டிய பொருட்களை தூவி இருபுறமும் தேச விட்டு எடுக்கவும்.