தேவையான பொருட்கள்
பேக்கிங் கொக்கோ பவுடர் - கால் கப்
சர்க்கரை - ஆறு டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, பேக்கிங் கொக்கோ பவுடர் மற்றும் சோள மாவு ஆகிவற்றை கொட்டி கலக்கவும்.
பின்பதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கரைக்கவும் .
இந்த கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.
கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.
பின்னர் அதை கப்புகளில் ஊற்றி குளிர் பதன பெட்டியில் வைக்கவும்.
நன்றாக உயர்ந்ததும் துருவிய சாக்லேட் மேலே தூவி பரிமாறவும்.