கேரட் ஸ்பைசி ரைத்தா

kuttybabuPPT
0
கேரட் ஸ்பைசி ரைத்தா

தேவையானவை 

கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா - கால் கப் 

நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு 

குளிர வைக்கப்பட்ட கெட்டி தயிர் - ஒரு கப் 

மிளகாய் தூள், சாட் மசாலா தூள் - தலா அரை டீஸ்பூன் 

காராபூந்தி - சிறிதளவு 

உப்பு - தேவைக்கு 

செய்முறை 

காரா பூந்தி தவிர்த்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
 
 பின்னர் காரா பூந்தி சேர்த்து கலந்து உடனே பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)