நெய்யப்பம்

kuttybabuPPT
0
நெய்யப்பம்

 தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 2

 வெல்லம் - 100 கிராம்

 அரிசி மாவு - ஒரு கப் 

தேங்காய் - ஒரு துண்டு

 சமையல் சோடா - ஒரு தேக்கரண்டி

 ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி

 நெய் - தேவைக்கேற்ப

 தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

 செய்முறை 

முதலில் இரண்டு வாழைப்பழத்தை அரைத்துக் கொள்ளவும்.

 அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு ஏற்றவும் .

அதில் வெல்லத்தைப் போட்டு கரைத்துக் கொள்ளவும் .

கரைத்த வெல்லத்தை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

 ஒரு கிண்ணத்தில் அரைத்த வாழைப்பழம், கரைத்த வெல்லம், ஏலக்காய் தூள், அரிசி மாவு, பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து கலக்கவும் .

தற்போது கலக்கிய மாவு சிறிது கடினமாக இருந்தால் சமையல் சோடா சேர்க்கவும் .

அடுத்து பணியார சட்டியை சூடேற்றி அதில் நெய் விட்டு மாவை ஊற்றவும்.

 அப்பம் ஒரு புறம் சிவந்த பிறகு மறுபுறம் சிறிது நெய் விட்டு பொன்னிறமாகும் வரை சுடவும்.
 சூடான மற்றும் இனிப்பான நெய் அப்பம் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)