தேவையானவை
கேரட் துருவியது - ஒரு கப்
பால் - கால் கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
முந்திரி பருப்பு - ஐந்து
திராட்சை - 5
பிஸ்தா - ஐந்து
செய்முறை
கேரட்டின் தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும் .
ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கேரட்டை நன்கு வதக்கி கொள்ளவும்.
கால் கப் பால் சேர்த்து நன்கு மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும்.
நன்கு வெந்ததும் கண்டன்ஸ்டர் மில்க் செய் சேர்த்து கிளறி விடவும்.
பாத்திரத்தில் ஓரம் ஒட்டாமல் பால் எல்லாம் நன்றாக வற்றி சுருண்டு வரும் போது ஏலக்காய் பொடி தூவி மேலே முந்திரி, பிஸ்தா திராட்சை சேர்த்து இறக்கவும்.