தேவையானவை
கடலைப்பருப்பு - ஒரு கப்
வெல்லம் துருவியது - ஒரு கப்
நெய், ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - எட்டு
பச்சை கற்பூரம் - சிட்டிகை
செய்முறை
கடலைப்பருப்பை ஊற வைத்து தண்ணீரை நன்றாக வடிய விட்டு மிக்ஸியில் ரவை பதத்தில் அரைக்கவும் .
ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும் .
அரைத்த விழுதை இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து மூடி பத்து நிமிடம் வேக விடவும்.
இன்னொரு ஸ்பூனால் குத்தி பார்த்தால் ஓட்டாமல் வரும் பின் ஆறவைத்து உதிர்த்து விடவும்.
அடுப்பில் பாத்திரத்தில் வெல்லம் கரைத்ததை சேர்த்து மிதமான தீயில் பாகு செய்யவும்.
பாகை எடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் விட்டால் சின்ன கமர்கட்டு பதம் இருக்கா என்று பார்க்க வேண்டும்.
வந்த உடன் அதில் கலவை சேர்த்து இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விடவும்.
ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம், பச்சையாகவே முந்தரி பருப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.