மைதா சீடை

kuttybabuPPT
0
மைதா சீடை 
தேவையானவை 

மைதா - 200 கிராம் 

அரிசி மாவு - 300 கிராம்

 மிளகாய் வற்றல் - மூணு

 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

 வெண்ணெய் - எலுமிச்சை அளவு

 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை

மைதா, அரிசி மாவு இரண்டையும் ஒரு தாம்பலத்தில் போட்டுக் கொள்ளவும்.

 மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், உப்பு இந்த மூன்றையும் நைசாக அரைத்து மாவில் போடவும்.

 வெண்ணையையும் போட்டு நன்றாக பிசைந்து சுண்டைக்காய் அளவில் சீடைகள் செய்து தாம்பலத்தில் போட்டு எண்ணெய் காய்ந்ததும் சீடை உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)