மலேசியா ஸ்பெஷல் ஜாலர் ஆப்பம்

kuttybabuPPT
0
மலேசியா ஸ்பெஷல் ஜாலர் ஆப்பம்
தேவையான பொருட்கள்

மைதா மாவு - ஒரு கப்

 முட்டை - ஒண்ணு 

தேங்காய் பால் - ஒரு கப் 

நெய் - நான்கு டீஸ்பூன் 

உப்பு - தேவைக்கு

 செய்முறை 

மைதா மாவு, முட்டை, தேங்காய் பால், உப்பு ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்தில் நன்றாக கலக்கவும்.

 ஜாலர் ஆப்பம் தயாரிப்பதற்கான அச்சில் இந்த மாவை ஊற்றவும்.

 அடுப்பில் தோசை கல்லை வைத்து அது சூடானதும் அதன் மீது மாவை அச்சின் வழியாக ஜிலேபி பிழிவது போல் கல் முழுவதும் பிழியவும்.

 பின் அதன் மீது சிறிது நெய் ஊற்றவும்.

 இதை மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை .

இப்போது சுவையான மலேசியா ஸ்பெஷல் ஜாலர் ஆப் தயார்.

 மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, முட்டை கிரேவி போன்றவை இதற்கு பொருத்தமாக இருக்கும்.

 சைவப் பிரியர்கள் ஜாலர் ஆபத்துடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம்.

 தக்காளி, கேரட், வெங்காயம், குடைமிளகாய் , வெள்ளரி ஆகிய காய்கறிகளை சுத்தம் செய்து புதிதாக நறுக்கிக் கொள்ளவும்.

 அவற்றை ஜாலர் ஆப்பத்தின் மீது பரப்பவும்.

 அதன் மேல் சீஸ் ஸ்சிலேஸ் வைத்து அதற்கு மேலாக மயோனஸ் தடவும்.
 மற்றொரு ஜாலர் ஆபத்தைக் கொண்டு இதை மூடி அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி வைக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)