அரேபிய ஸ்பெஷல் முதபல்
முதபல் என்பது கத்திரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் டிப் வகை உணவாகும். இதை தயாரிப்பதற்கு வெள்ளை எள் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்த தகிணி என்ற விழுது முக்கியமானது.
இரண்டு பங்கு வெள்ளை எள்ளுடன் ஒரு பங்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து மென்மையாக பசை போல் அரைத்தால் தஹினி தயார் .
தேவையான பொருட்கள்
பெரிய கத்திரிக்காய் - இரண்டு
கருப்பு எள் - அரை டீஸ்பூன்
தஹினி விழுது - இரண்டு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - ஒரு டீஸ்பூன்
பூண்டு நறுக்கியது - இரண்டு டீஸ்பூன்
கெட்டி தயிர் - 2 டீஸ்பூன்
மாதுளம் பழ முத்துக்கள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஆலிவ் எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
செய்முறை
கத்திரிக்காயை கழுவி ஈரம் இல்லாமல் துடைக்கவும்.
பின்னர் அதன் மேல் பகுதியில் லேசாக கீரி அடுப்பில் நேரடியாக சுட்டு எடுக்கவும் .
கருகிய மேல் தோலை நீக்கிவிட்டு சதை பகுதியை நன்றாக வசித்துக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் தஹினி விழுது, எலுமிச்சம் பழச்சாறு, பூண்டு , கெட்டி தயிர், உப்பு, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து மென்மையான பசை போல கலக்கவும்.
பின்னர் அதன் மேல் கருப்பு எள் மற்றும் சில மாதுளம் பழம் முத்துக்களை கொண்டு அலங்கரிக்கவும்.
இதை ரொட்டி சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்ந்து சாப்பிடலாம்.