சுவையான சப்பாத்திக்கு

kuttybabuPPT
0
சுவையான  சப்பாத்திக்கு

சப்பாத்தியை சுவையாக்க நீருடன் மோர் , மிளகு, சீரகப்பொடி, உப்பு கலந்து கோதுமை மாவை பிசைந்தால் சுவையாக இருக்கும்.

 சப்பாத்தி மாவில் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை, மணம் கூடிவிடும்.

 வெந்நீர் அல்லது சூடான பாலை நீருடன் கலந்து பிசைந்தால் சப்பாத்தி மெருதுவாகவும், சுவையாகவும் இருக்கும் .

ஒரு பங்கு கோதுமை மாவுக்கு பாதி பங்கு நீரை கொதிக்க வைத்து அதில் மாவை தூவி கைவிடாமல் கிளறினால் மாவு வெந்து சப்பாத்தி சுட எளிதாக இருக்கும் .
கை வலிக்காது.
 சப்பாத்தியும் மென்மையாக வரும்.

 கோதுமை மாவுடன் சம பங்கு பார்லி மாவு கலந்து பிசைந்தால் சுவை கூடி மிருதுவாகவும் .

 சப்பாத்தி செய்யும் கோதுமை மாவில் தண்ணீருக்கு பதில் இளநீர் கலக்கலாம் .

தயிர் கலந்து மாவை பிசைந்தால் சப்பாத்தி சுவை கூடிவிடும்.

 சப்பாத்தி மாவில் ஏலக்காய் பொடி, சுக்குத்தூள் சிறிது கலந்தால் சுவையும், மணமும் கூடிவிடும்.
 எளிதில் ஜீரணமாகும்.

 பிசைந்த மாவை மூடிய பாத்திரத்தில் அரை மணி நேரம் வைத்து ஊறவிட்டால் சப்பாத்தி மென்மையாக இருக்கும் .

காற்று பட்டால் மாவு வறண்டு சப்பாத்தி சரியாக இட முடியாது.
 சோடா உப்பு சேர்க்க தேவையில்லை.

Post a Comment

0Comments
Post a Comment (0)