தேவையானவை
பாசிப்பருப்பு - ஒரு கப்
உளுந்து - அரை கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
வெந்தயம் - இரண்டு தேக்கரண்டி
புளித்த தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பையும், உளுந்தையும் ஒன்றாக ஊற வைக்கவும்.
புழுங்கல் அரிசியோடு வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும்.
அவை நன்றாக ஊறியதும் முதலில் அரிசியை அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் பருப்பை நன்றாக அரைத்து அதனுடன் கலந்து உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும் .
அதனுடன் புளித்த தயிர் சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
பயன்கள்
பாசிப்பருப்பில் கால்சியம், பாஸ்பரஸ், புரதம், கார்போஹைட்ரேட் சிறிதளவு இரும்பு சத்தும் அடங்கியுள்ளது.
உடலுக்கு நன்மை செய்யும் நார்ச்சத்தும், தாது பொருட்களும் அடங்கியுள்ளன.