தஹி பப்படி சாட்

kuttybabuPPT
0
தஹி பப்படி சாட்

தேவையானவை 

மைதா - ரெண்டு கப் 

ஓமம் - அரை ஸ்பூன் தூள் 

உப்பு - அரை ஸ்பூன் 

நெய் - நான்கு ஸ்பூன் 

தயிர் - மூன்று கப் 

ப்ளாக் சாலட் - ஒரு ஸ்பூன்

 ஐசிங் சுகர் - ரெண்டு ஸ்பூன் 

உருளை -  ரெண்டு 

சுவிச் சட்னி - இரண்டு ஸ்பூன்

 பச்சை சட்னி - இரண்டு ஸ்பூன்

 காரா பூந்தி -  மூன்று ஸ்பூன் 

மாதுளை - ஒரு ஸ்பூன் 

எண்ணெய் - சிறிதளவு 

செய்முறை 

மைதாவில் ஓமம் தூள், உப்பு, நெய் ஆகியவை போட்டு கலக்கவும்.

 தேவையான நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து மிகவும் சிறிய உருண்டைகளாக உருட்டி அவற்றை தேய்த்து அதன் மேல் ஃபோக்கால் (Fork) அங்கங்கே குத்தவும்.

 பின்பு அந்த தட்டைகளை எண்ணெயில் பொரிக்கவும் .

தயிரை பெரிய வடிகட்டில் ஊற்றி வடிகட்டவும்.

 அதில் பிளாக் சாலட் , ஐசிங் சுகர் ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

 பொறித்த தட்டைகளை தயிரில் போட்டு எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

 அதன் மீது சாட் மசாலா தூவவும்.

 ஒவ்வொரு தட்டை மீதும் ஒரு உருளை துண்டை வைக்கவும்.

 சுவிட் சட்னி , பச்சை சட்னி , தயிர் ஆகியவற்றை அதன் மீது உற்றவும்.
 காரபுந்தியையும், மாதுளை முத்துக்களையும் தூவினால் தகி பப்படி சாட் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)