அவிச்ச மசாலா கோழி வறுவல்

kuttybabuPPT
0
அவிச்ச மசாலா கோழி வறுவல்

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - அரை கிலோ 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

காய்ந்த மிளகாய் -10

 தனியா - மூன்று டேபிள் ஸ்பூன்

 சின்ன வெங்காயம் - 200 கிராம் 

பட்டை - ஒன்னு

 லவங்கம் - 7 

சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

 கசகசா - இரண்டு டேபிள் ஸ்பூன்

 இஞ்சி விழுது - 2 டேபிள் ஸ்பூன் 

பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

  கடலை எண்ணெய் - ஒரு குழி கரண்டி

 தேங்காய் துருவல் - ஒரு கப்

 கருவேப்பிலை - ஒரு கொத்து

 கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

 உப்பு - தேவையான அளவு

 செய்முறை

கோழிக்கறியை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

 கசகசாவை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

 பிறகு பட்டை,  சோம்பு மற்றும் லவங்கம், கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

 காய்ந்த மிளகாய் தனியா மற்றும் சின்ன வெங்காயத்தை உரித்து கழுவி தனித்தனி தட்டில் இட்லி பானையில் 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.

 வெங்காயத்தை ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும் .

மிளகாய் மற்றும் தனியாவை தனித்தனியாக நைசாக அரைக்க வேண்டும்.

 அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, வேக வைத்து அரைத்த வெங்காயத்தை போட்டு கிளறவும்.

 கழுவி வைத்த கோழிக்கறியை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அனலை குறைத்து கிளறவும்.

 பின்பு அதை மூடி வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.

 இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து  வதக்கவும்.

 அரை டம்ளர் நீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.

 பிறகு அரைத்த மசாலா மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து கிளறவும்.

 மசாலா நன்கு வாசனை போனதும் எண்ணெய் பிரிந்தது வரும்போது திறக்கவும் .

வேறொரு வானிலையில் எண்ணெய் விட்டு துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

 அதில் கருவேப்பிலை சேர்த்து முறுகலாக வறுத்து இரண்டையும் போட்டு கிளறவும் .

கொத்தமல்லி, கீரை தூவி பரிமாறவும்.

 சுவையான அவித்த மசாலா கோழிக்கறி தயார்.

 குறிப்பு
ஆட்டுக்கறி , இறால் , காளான், பன்னீர் போற்றுவற்றிலும் இதுபோன்று செய்து சாப்பிடலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)