ரபடி

kuttybabuPPT
0
ரபடி

தேவையானவை

க்ரீம் நிறைந்த பால் - 1/2 லிட்டர்

குங்குமப்பூ - 2 சிட்டிகை

ஏலக்காய் - 3 

பாதாம் பிஸ்தா பருப்புகள் - தலா ஐந்து கிராம்

 கன்டன்ஸ்ட் மில்க் - 100 மில்லி

 செய்முறை 

அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

 ஆடை சேர சேர கரண்டியால் பாத்திரத்தின் பக்கவாட்டு ஓரங்களில் தள்ளித்தள்ளி விடவும்.

 பால் பாதியாக வற்றியதும் பக்கவாட்டு ஓரங்களில் ஒதுக்கி வைத்துள்ள ஆடைகளை பால் பாத்திரத்துக்குள் தள்ளி மேலும் கொதிக்க விடவும் .

சிறிதளவு வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை போட்டு கரைத்து பாலில் சேர்க்கவும்.

 கன்டன்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

 கடைசியாக பாதாம் பிஸ்தா பருப்புகளை சேர்க்கவும் .

ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும்.
 மாலை நேர ஸ்நேக்ஸ் ஆகவோ, உணவுக்கு பிறகான டெஸெட்டாகவோ சாப்பிட ஏற்றது இந்த ரபடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)