ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து மோரில் கலக்கி பச்சை மிளகாயை ஊற வைத்து பின்னர் காய போட்டால் மிளகாய் பார்க்க மென்மையாகவும், அதிக ருசியாகவும் இருக்கும்.
இடியாப்பத்துக்கு செய்யும் போது சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொண்டால் சுலபமாக பிழியலாம் .
வத்த குழம்பு தாளிக்கும் போது ஆரஞ்சு பழத்தோலையும் சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.
ஃப்ளாஷ்கின் சூடான திரவத்தை ஊற்றும் போது பிளாஷ்க்கை சாய்வாக வைத்து ஊற்ற வேண்டும்.
உளுந்தம் பருப்பை ஊறவைத்து நைசாக அரைக்க வேண்டும். அதை அரைத்து அள்ளும்போது அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் , உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வடை செய்தால் நன்றாக இருக்கும் .
உருளைக்கிழங்கை வேக வைத்து அரைத்து தோசை ஊற்றினால் நன்றாகவும், சுவையாகவும் இருக்கும்.
சமைக்கும் போது குழம்பிலோ, கூட்டிலோ உப்பு கூடினால் பச்சை உருண்டை கிழங்கை வெட்டி குழம்பிலோ கூட்டிலோ சேர்க்கவும். இவ்வாறு செய்தால் உப்பு குறைந்து நல்ல சுவையுடன் இருக்கும்.
முளைவிட்ட பச்சை பயிறு சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
தானியங்களை நன்கு கழுவி இரவு முழுவதும் சுத்தமான நீரில் ஊற வைக்க வேண்டும் .
மறுநாள் மெல்லிய துணியில் ஊறிய தானியங்களை காற்றோட்டமான இடத்தில் தொங்க விட்டால் 8 மணி நேரத்தில் பயிர்கள் முளை விடும். முளைவிட்ட தானியங்களை சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் .
பாதாம் கொட்டையில் முளை கட்டும் போது உடலில் கொழுப்பு அளவை குறைக்கும்.
லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது .ஆக்சிஜன் எதிர்ப்பொருள்கள் மிகுந்த முளைக்கட்டும் தானியங்களை சாப்பிட்டால் முதுமை தள்ளி போகும்.
முளைகட்டிய வெந்தயங்களை சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுப்படும் .
கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் அல்சரை குணப்படுத்தலாம் .
கொள்ளு முளைப் பயிரை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கூடும்