தேவையான பொருட்கள்
பச்சரிசி - 3 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 3 கிண்ணம்
உளுந்து - ஒரு கிண்ணம்
சாதம் - மூன்று கைப்பிடி அளவு
வெந்தய பொடி - மூன்று தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
பாலாடை கட்டி - ஒரு துண்டு
தேங்காய் துருவல் - ஒரு மூடி
பாதாம் பிஸ்தா முந்திரி - சிறிதளவு
நாட்டு சர்க்கரை - 200 கிராம்
செய்முறை
முதலில் வெந்தயத்தை முளைக்கட்ட செய்து காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து துருவ வேண்டும்.
பின்னர் நெய்யில் தேங்காய் துருவலை நிறம் மாறாமல் வதக்கவும்.
பின்னர் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து இவற்றை ஒன்றாக சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் நன்றாக ஊறியதும் வெந்தய பொடி, சாதம் ஆகியவற்றை சேர்த்து ஆப்ப மாவு பதத்திற்கு அரைக்கவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு கரைத்து ஒன்பது மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சூடானதும் மாவை சற்று கனமான தோசையாக ஊற்றி சுற்றிலும் நெய் விட்டு மூடி வேகவைத்து எடுக்க வேண்டும் .
பிறகு அதை நமக்கு விரும்பிய வடிவங்களில் நறுக்கி மேலே தேங்காய் துருவல், பாலாடை கட்டி துருவல், பாதாம், பிஸ்தா, முந்திரி துருவல் , நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் இதனுடன் தேங்காய் பால் ஊற்றியும் சாப்பிடலாம்.