தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - ஒரு கிண்ணம்
துருவிய வெல்லம் - இரண்டு கிண்ணம்
காய்ச்சிய பால் - இரண்டு கிண்ணம்
கற்றாழை தோல் சீவி நறுக்கியது - 2
முந்திரி - பத்து
பாதாம் - 10
ஏலக்காய் பொடி - இரண்டு சிட்டிகை
நெய் - மூன்று தேக்கரண்டி
செய்முறை
முதலில் கற்றாழையை தோல் சீவி நன்றாக அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பாதாம், முந்திரியை நெய்யில் வறுக்கவும்.
பின்னர் பாசிப்பருப்பை ஒரு வெறும் வாணிலியில் போட்டு வறுத்து பின் குக்கரில் குழைய வேகவைத்து மசித்து கொள்ளவும்.
அதனுடன் காய்ச்சிய பாலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அதனுடன் துருவிய வெல்லத்தை சேர்த்து வெல்லும் கரைந்ததும் கற்றாழையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் பாதாம், ஏலக்காய் பொடி, முந்திரி, சேர்த்து இறக்கினால் சுவையான கற்றாழை பருப்பு பாயாசம் தயார்.