தேவையான பொருட்கள்
முந்திரி - ஒரு கப்
மீன் - ஒன்னு
மிளகாய் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மீன் மசாலா - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு முந்திரியை கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் .
அதன் பின் முந்திரியுடன் மிளகாய் தூள் , உப்பு, மஞ்சள் தூள் , மீன் மசாலா, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து மீனின் மீது தடவிக் கொள்ளவும் .
மீனின் மீது முந்திரி மசாலாவையும் சேர்த்து பின்பு 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி மீனை அதில் பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி மீன் வருவல் ரெடி.