தேவையான பொருட்கள்
தோசை மாவு, குடை மிளகாய், வெங்காயம், கார்ன், பீட்சா சாஸ், சில்லி பிளேக்ஸ், சீஸ், எண்ணெய்
செய்முறை
பீட்சா தோசை செய்வதற்கு முதலில் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .
பிறகு குடைமிளகாயை நீள நீளமாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தனியாக கார்ன் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் .
தோசைக்கல் சூடானதும் அதில் மாவை கனமாக ஊத்தி அப்படியே மூடி வைத்து லேசாக வேக வைக்க வேண்டும் .
பிறகு தோசை மேல் பீசா சாஸ் தடவி அதன்மேல் வதக்கிய குடைமிளகாயையும், வெங்காயத்தையும் போட்டு பின்னர் கார்ணையும் போட வேண்டும்.
பிறகு அதன் மேல் சீஸ் தடவி விட்டு மூடி நன்றாக வேக வைக்க வேண்டும்.
நன்றாக வெந்த தோசையில் சில்லி பிளக்ஸ் தூவி இறக்கினால் சுவையான பீசா தோசை ரெடி.