தேவையான பொருட்கள்
ஸ்வீட் கார் முத்துக்கள் - இரண்டு கப்
பசலைக் கீரை - ஒரு சிறிய கட்டு
எண்ணெய் அல்லது வெண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மசாலாவுக்கு
முந்திரி - இரண்டு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் பொடிதாக நறுக்கியது - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் பொடிதாக நறுக்கியது - அரை கப்
தக்காளி - பொடியாக நறுக்கியது
இஞ்சி - ஒரு அங்குள்ள துண்டு
பூண்டு - நான்கு பல்
உலர்ந்த பூசணி விதை - ஒரு டீஸ்பூன்
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பசை போல அரைத்துக் கொள்ளவும் .
செய்முறை
ஸ்வீட் கார்னை தனியாக வேக வைத்து வடிகட்டவும் .
பசலை கீரையை சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும்.
பின்னர் உடனே அதை குளிர்ந்த தண்ணீரில் போட்டு எடுத்து பசை போல அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணிலையை வைத்து அதில் எண்ணெய் அல்லது வெண்ணையை ஊற்றி சூடு படுத்தவும் பின்பு அதில் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.
பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் .
பின்னர் பசலைக்கீரையை வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும் .
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும் .
பின்னர் அதில் ஸ்வீட் கார்னை சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
பாலக் கார்ன் தயார்.