ஆந்திரா கன் பவுடர்

kuttybabuPPT
0
ஆந்திரா கன் பவுடர்

தேவையானவை 

துவரம் பருப்பு , கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு தலா - அரைக்கப்

 வர மிளகாய் -  12 

கருவேப்பிலை - மூணு கொத்து 

சீரகம், பெருங்காயம் தலா - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவைக்கு

 செய்முறை 

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றையும் வெறும் வாணிலையில் தனித்தனியாக போட்டு பொன்னிறமாகி வாசனை வரும் வரை வறுக்கவும்.

 வர மிளகாய், கருவேப்பிலை சற்று நிறம் மாறும் வரை வறுத்து எடுக்கவும்.

 அதே வாணிலையில் சீரகத்தை போட்டு லேசாக பாெரிந்ததும் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும் .

வறுத்த அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

 குறிப்பு இந்த பொடியை சூடான சாதத்தில் போட்டு நெய் ஊற்றி பரிமாறலாம்.
 பொறியல்களிலும் சேர்க்கலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)